இளைஞனால் வன்புணர்வுக்கு உள்ளான சிறுமி தற்கொலை!
இளைஞன் ஒருவரால் வன்புணர்வுக்கு உள்ளான 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் துரதிஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதுளை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 20 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தரம் 11 இல் கல்வி கற்று வந்த நெத்து ஹசரங்கி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
நான்கு நாட்களுக்கு முன்னர் முகநூல் ஊடாக பழக்கமான இளைஞன் ஒருவன் சிறுமியை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு பதுளை ரிதீபான சருங்கல் கந்த பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் உயிரிழந்த சிறுமி தனது இரண்டு நண்பிகள் மற்றும் அவரது தாயாருக்கு தனக்கு நடந்ததை குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, வீட்டிற்கு வந்த பாடசாலை மாணவி தனது பாட்டியின் உயர் ரத்த அழுத்த மருந்துகளை அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமி பிறப்பதற்கு முன்பே தந்தை அவர்களை கைவிட்டு சென்று விட்டார்,
மகளின் எதிர்காலம் கருதி தாய் வௌிநாடு சென்று விட்டார், இவ்வாறு தனித்து விடப்பட்ட மற்றுமொரு சிறுமிக்கு இது போன்ற விபரீதக் குற்றம் நிகழும் முன் விழிப்புடன் இருக்க வேண்டியது ஒட்டு மொத்த சமுதாயத்தின் பொறுப்பல்லவா?

No comments:
Post a Comment