அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா பிரபல பாடசாலை மாணவர்களின் உயர்தர ஒன்று கூடலின் போது வீதியில் கைகலப்பு: பொலிசார் விசாரணை

 வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களின் ஒன்று கூடலின் போது பாடசாலைக்கு முன்பாக வீதியில் நின்றவர்களுடன் பாடசாலை மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் இன்று (06.12) தெரிவித்தனர்.


வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களுக்கான ஒன்று கூடல் நேற்று (05.12) மதியம் இடம்பெற்றது. இதன்போது உயர்தர மாணவர்கள் சொகுசு கார்கள் மற்றும் அதியுயர் வேகம் கொண்ட மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுடன் பாடசாலைக்கு வருகை தந்ததுடன், பாடசாலை முன்பாக அவற்றை செலுத்தி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தினர்.

இதன்போது பாடசாலையில் ஏனைய வகுப்பு மாணவர்களை ஏற்ற வந்த பெற்றோர் ஒருவருடன் விபத்து ஏற்பட்டதையடுத்து, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அப் பகுதியில் இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து அப் பகுதியில் பொலிசார் வருகை தந்து  நிலமையை கட்டுப்படுத்தினர்.

குறித்த சம்பவத்தின் போது, பாடசாலை வளாகத்தற்குள் இருந்து வருகை தந்து உயர்தர மாணவர்கள் பல தடவைகள் பெற்றோருடன் முரண்பட்ட போதும், பாடசாலை நிர்வாகம் மற்றும் கடமையில் இருந்த பதில் அதிபர், பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோர் ஆக்க பூர்வமான நடவடிக்கைளை எடுக்கவில்லை எனவும், நிலமையை கட்டுப்படுத்தவில்லை எனவும் அப் பாடசாலையின் பெற்றோர்களும், பாடசாலை சமூகமும் குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த மாணவர்கள் பின்னர் குறித்த சொகுசுகார்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்களில் பயணித்து வைவரவபுளியங்குளம் பகுதியிலும் பொது போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி குழப்பம் விளைவித்தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 







வவுனியா பிரபல பாடசாலை மாணவர்களின் உயர்தர ஒன்று கூடலின் போது வீதியில் கைகலப்பு: பொலிசார் விசாரணை Reviewed by Author on December 06, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.