கால்வாயில் தவறி விழுந்து இரண்டு இளைஞர்கள் பலி- கிளிநொச்சியில் சம்பவம்
கால்வாயில் தவறி விழுந்து இரண்டு இளைஞர்கள் பலி- கிளிநொச்சியில் சம்பவம்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் பிரதான வீதியான பனங்கண்டி இரணைமடு குளத்தின் பிரதான கால்வாயில் நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அருகில் இருந்த கால்வாயில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இராமநாதபுரம் கல்மடு நகர் பகுதியைச் சேர்ந்த தயாளன் தனுசன் மற்றும் இராமநாதபுரம் அழகாபுரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் சதீசன் என்னும் இரண்டு இளைஞர்களே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரின் சடலமும் கிளிநொச்சி நீதவான் முன்நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment