அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை உடைத்து திருட்டு - பொலிஸார் விசாரணை

 வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை உடைத்து திருட்டு - பொலிஸார் விசாரணை.




வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை உடைத்து திருட்டு சம்பவம் தொடர்பில் இன்று (14.04.2024) காலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.


குறித்த பாடசாலையில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் நேற்றையதினம் (13.01) கண்டறியப்பட்டமையினையடுத்து பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நேற்றையதினம் மாலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.


இச் சம்பவம் தொடர்பில் பாடசாலைக்கு இன்று (14.01) காலை விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணோளிகளையும் பரிசோதனைக்குட்படுத்தினர்.


இதன் போதே கடந்த வெள்ளிக்கிழமை (12.01.2023) மதியம் 3.29 மணியளவில் 15வயது மதிக்கத்தக சிறுவனோருவர் தொலைக்காட்சியினை தூக்கிக்செல்வது சிசிரிவியில் பதிவாகியுள்ளது. சிசிரிவி காட்சியின் உதவியுடன் அவ் சிறுவனை கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளமையுடன் பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை பாதுகாவலர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.







வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை உடைத்து திருட்டு - பொலிஸார் விசாரணை Reviewed by வன்னி on January 14, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.