வவுனியா - திருகோணமலை வீதியில் சடலம் மீட்பு
வவுனியா - திருகோணமலை வீதியில் சடலம் மீட்பு
வவுனியா - திருகோணமலை பிரதான வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, திருகோணமலை பிரதான வீதியின் வவுனியா எல்லைப்புறமாக ஹெப்பற்றிப்கொல்லாவ பகுதியிலேயே இச் சடலம் நேற்று (20.01) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அறுபது வயது மதிக்கத்தக்க இவ் முதியவர் விபத்தின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும், விபத்தினை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்தியவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர் வவுனியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெப்பற்றிப்கொல்லாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா - திருகோணமலை வீதியில் சடலம் மீட்பு
Reviewed by வன்னி
on
January 21, 2024
Rating:

No comments:
Post a Comment