அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்கள் விடுவிப்பு வெளிவிவகார அமைச்சின் அழுத்தத்தினாலே கடற்றொழில் அமைச்சர் விடுவிக்க இணங்கியிருக்கலாம்-வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும் ஊடக பேச்சாளருமான என்.எம்.ஆலம்

 இந்திய மீனவர்கள் விடுவிப்பு வெளிவிவகார அமைச்சின் அழுத்தத்தினாலே  கடற்றொழில் அமைச்சர் விடுவிக்க இணங்கியிருக்கலாம்-வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும் ஊடக பேச்சாளருமான என்.எம்.ஆலம்



இந்திய மீனவர்கள் விடுவிப்பு வெளிவிவகார அமைச்சின் அழுத்தத்தினாலே  கடற்றொழில் அமைச்சர் விடுவிக்க இணங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும், மீனவர்களின் விடுவிப்பிற்கு வடக்கு மீனவர்களாகிய நாங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதாக வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும் ஊடக பேச்சாளருமான என்.எம்.ஆலம் தெரிவித்தார்.


இன்றைய தினம்(21) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,, தற்போது இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக வெளி வந்திருக்கும் தகவல்கள் என்ற ரீதியில் வடபகுதியில் இருக்கும் மீனவர்கள் இதனை எவ்வாறு நோக்குகிறார்கள், இந்த பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு  முடிவுக்கு கொண்டு வர இருக்கிறார்கள் என்பது தொடர்பாக வெளிப்படுத்த விரும்புகிறேன்.

குறிப்பாக ஒரு மாத காலப்பகுதிக்குள்  வடக்கில் இருக்கின்ற நெடுந்தீவு, பருத்தித்துறை அதற்கு அப்பால் சில நாட்களுக்கு முன் மன்னார் கடற்பரப்புக்குள் கைது செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட இந்திய  தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் கடற்றொழில் அமைச்சின் சிபாரிசுக்கு அமைய நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக தகவலை நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.

இந்த தகவல் உண்மையில் கடற்றொழில் அமைச்சரின் நிலைப்பாடு என்ன? என்பதை கேள்வி குறியாக்கியுள்ளது.

குறிப்பாக இதே போன்ற ஒரு விடயம் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய நிதியமைச்சர்  தமிழ்நாட்டுக்கு வந்த போது அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  எந்தவித சட்ட நடவடிக்கைக்கு உட் படுத்தாத மீனவர்கள் 20 பேர் விடுவிக்க பட்டிருந்தனர்.


 அந்த நேரத்திலும் நாங்கள் அதற்கு எங்களுடைய எதிர்ப்புக் குரலை வெளியிட்டு இருந்தோம். தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 40 மீனவர்களை விடுவிப்பதற்கு நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இல்லாத நிலையில்  வெளிவிவகார அமைச்சரின்  வேண்டு கோளுக்கு அமைய கடற்றொழில் அமைச்சர் விடுவிப்பதாக அந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

 எனவே நாட்டில் ஜனாதிபதி இருந்தாலும் இதே நிலைதான் கடற்றொழில்  அமைச்சர் இருந்தாலும் இந்த நிலை தான் என்றால் ஏன் இந்த கைதுகள் இடம் பெறுகின்றது ? இவ்வளவு பணம் செலவு  செய்து  இந்த மீனவர்களை கைது செய்ய வேண்டுமா? என்ற கேள்வி இருக்கிறது.

  நாங்கள் வலியுறுத்துகின்ற ஒரே விடயம் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக வடபகுதி கடற்பரப்புக்குள் அனுமதிக்க கூடது என்பதுதான்.

 அதை வலியுறுத்தியதாக தான் நாங்கள் தொடர்ந்து இந்த கைதுகளை மேற்கொள்ளுமாறும் அவர்களுடைய படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

 ஆனால் வட பகுதி மீனவர்கள் முன்வைக்கின்ற எந்த கோரிக்கையையும் செவிசாய்க்காத அரசாங்கமும் இந்த கடற்றொழில் அமைச்சும் வெறுமனே இந்திய உயர்மட்ட தலைவர்கள் தமிழ் நாடு வருகின்ற போது அவர்களால் விடுக்கப் படுகின்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கின்றோம் என்று கூறி விடுகின்றார்கள் தொடர்ந்து இந்த நிலைதான் காணப்படுகிறது. 

இது மனிதாபிமானமா? அல்லது    பயமா அவர்களுக்காக நாங்கள் பயப்படுகின்றோமா? ஒரு பெரிய நாடு சிறிய நாட்டை பயம்காட்டி தங்களுடைய வேலையை செய்விக்கின்றார்களா? என்ற கேள்வியை நாங்கள் முன் வைக்கின்றோம்.

 நல்லிணக்க அடிப்படையில் நாம் விடுவது தவறு என்று நாங்கள் கூறவில்லை .ஆனால் நல்லிணக்கம் என்பது என்ன? ஒருவர் ஒரு தரம் வருகின்றார் மனிதாபிமானமாக  அவரை விடுவிக்கின்றோம்,  இரண்டாவது முறை அதே தவறு செய்யும் போது எவ்வாறு அந்த மனிதாபிமானத்தை அல்லது நல்லிணக்கத்தை பற்றி பேசுவது?

எமது வளங்களை அழிக்கிறார்கள், எமது எல்லையை தாண்டி எமது கரையோரங்களுக்கு வந்து இந்த வேலை செய்கிறார்கள், எனவே அவர்களை கைது செய்யுங்கள் அவர்களுடைய படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என நாங்கள் கூறுவது  வெறுமனே கூச்சல் அல்ல. எமது வாழ்வாதார இழப்பு ,இந்த நாட்டின் இறைமை பறிபோகும் தன்மையை இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் இங்கு வாழ்கின்ற மக்கள் என்ற வகையில் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்.

 எனவே நல்லிணக்கம் என்பதை இந்த அரசு  சரியாக புரிந்து கொள்ளவில்லை. அல்லது சரியாக புரிந்து கொண்டு அந்த மீனவர் விடுவிப்பை செய்யவில்லை குறிப்பாக ஒருவரை விடுவிப்போம் என்றால் எந்த நாடாவது சரி அந்த கோரிக்கை விடுப்பவரோ சரி தயவு செய்து அந்த நாட்டுக்கு போகாதீர்கள்.

அந்த நாட்டில் இருக்கின்ற மக்களை  சுரண்டாதீர்கள், அந்த மக்களுக்கு துன்பத்தை கொடுக்காதீர்கள்,   நமது எல்லைக்குள் தொழில் செய்யுங்கள், கரையோரம் வரை போகாமலாவது தொழில் செய்யுங்கள், என்ற கோரிக்கையை நல்லிணக்கம் விடுபவர் கூட தெரிவிக்கலாம்.

 ஆனால் இங்கு கேட்பவரும் விடுப்பதில்லை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்கும் அரசும் கூட இந்த நிபந்தனையை விதிப்பதும்  இல்லை .

எனவே வெறுமனே பிடிப்பதும் அவர்களை  ஐந்து,பத்து   நாளில் விடுவிப்பது தான் இந்த  மனிதாபிமானமா?என்ற கேள்வி வட பகுதி மீனவர்கள் மத்தியில் இருக்கிறது.

எனவே ஒன்றைக் குறிப்பிடலாம். இந்த நடைமுறை இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இந்த கடல் வளங்களை கையாளுவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று செய்யப்படுகிறது அந்த ஒப்பந்தத்தில் முழுக்க முழுக்க இந்திய நலன் சார்ந்த ஒப்பந்தமாக இருக்கிறது.

 வெறுமனே கடற்றொழில் அமைச்சர் நான் தான் கடற்றொழில் அமைச்சர் நான் தான் தீர்மானம் எடுப்பேன் என கூறி வந்தாலும் நாட்டில் ஒரு வெளிவிவகார கொள்கை இருக்கின்றது.

 நாட்டுக்கிடையில் ஒப்பந்தம் இருக்கிறது. அந்த ஒப்பந்தம் தான்  புதிதாக கொண்டு வர இருக்கும் சட்ட வரைப்பு. அதில் வெளிநாட்டு படகுகளை அனுமதியோடு வரியை பெற்றுக் கொண்டு வசூலை பெற்றுக் கொண்டே விடுவிப்பது என்பது அந்த வெளிவிவகார கொள்கையின் உள்ள விடயம்.

  எனவே நாங்கள் எவ்வாறு நான் அதை  திருத்த முற்பட்டாலும் அந்த விடயத்தில் அரசு விட்டு கொடுப்பை செய்யுமா என்பது கேள்விக்குறி. 

எனவே வெளிவிவகார அமைச்சு இதில் முழுமையாக தலையிட்டு இருக்கிறது. வெளிவிவகார அமைச்சின் அழுத்தினால் தான் கடற்றொழில் அமைச்சர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகின்றது.   நான் தான் கடற்றொழில் அமைச்சர் நான் எடுப்பதுதான் தீர்மானம் என்பதை போல இருப்பதை விடுத்து இப்போதாவது  அவர் தன்னுடைய  நிலையில் இருந்து மாற்றத்தை பெற வேண்டும்.

 அல்லது எங்களுக்கு ஒரு சரியான விடயத்தை குறிப்பிட வேண்டும். தொடர்ச்சியாக அந்த விஷயத்தை மட்டும் கூறுவாராக  இருந்தால் நாங்கள் அவர் மீது சந்தேக பார்வையோடு பார்க்க வேண்டிய தேவை ஏற்படும் என்பதை வலியுறுத்தி கூறுகிறேன் 
என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் விடுவிப்பு வெளிவிவகார அமைச்சின் அழுத்தத்தினாலே கடற்றொழில் அமைச்சர் விடுவிக்க இணங்கியிருக்கலாம்-வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும் ஊடக பேச்சாளருமான என்.எம்.ஆலம் Reviewed by வன்னி on January 22, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.