அண்மைய செய்திகள்

recent
-

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று கொழும்பில் காலமானார்.

 இசைஞானி  இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று கொழும்பில் காலமானார்.



தமிழ் திரையுலக இசைத்துறையில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று கொழும்பில் காலமானார்.

இந்நிலையில் அவரது உடல் லங்கா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மலர்சாலைக்கு எடுத்து செல்லப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், அவரது உடல் இன்று காலை இந்தியாவிற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி  உடல் நலக்குறைவால்  இலங்கையில் வைத்து நேற்று மாலை காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக  கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு 47 வயதாகும்.

கடந்த 5 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதியுற்றதாகவும், இதன் காரணமாக அவர் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் உயிரிழந்துள்ள நிலையில், நாளை மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், தற்போது கொழும்பில் தங்கியிருக்கும் இசைஞானி இளையராஜா,  அவரது மகள் பவதாரணி  காலமான தனியார் வைத்தியசாலையை நோக்கி விரைந்துள்ளார்.

இதேவேளை, இசைஞானி இளையராஜாவின் விசேட இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொழும்பில் நடைபெறவிருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியினுடைய ஏற்பாட்டாளரான பாஸ்கரனுடன் எமது செய்திப் பிரிவானது தொடர்பு கொண்டு கேட்ட போது அது தொடர்பான தகவல்கள் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பவதாரணியின் உடலானது கொழும்பில் அமைந்துள்ள ஜயரத்ன மலர்சாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.


இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று கொழும்பில் காலமானார். Reviewed by வன்னி on January 26, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.