டித்வா நிவாரண மோசடி - கிராம சேவகர் பணிநீக்கம்
மொனராகலை மாவட்டத்தில் டித்வா இழப்பீட்டு வழங்கல் தொடர்பாகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரியின் பணி தற்காலிகமாகப் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இக்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கிராம சேவகரும் விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வேறு ஒரு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவங்கள் குறித்து தற்போது முறையான மற்றும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா நிவாரண மோசடி - கிராம சேவகர் பணிநீக்கம்
Reviewed by Vijithan
on
May 17, 2026
Rating:
Reviewed by Vijithan
on
May 17, 2026
Rating:


No comments:
Post a Comment