அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் எலிக் காய்ச்சலால் இளைஞர் மரணம்!

 வவுனியாவில் எலிக் காய்ச்சலால் இளைஞர் மரணம்!


வவுனியாவில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.


செட்டிகுளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞருக்கு சில தினங்களா காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து செட்டிகுளம்  பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் நேற்று முன்தினம்  (30.12) மரணமடைந்தார்.

இதன்பின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் குறித்த இளைஞன் எலிக்காய்சல் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயது  இளைஞரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.



வவுனியாவில் எலிக் காய்ச்சலால் இளைஞர் மரணம்! Reviewed by வன்னி on January 01, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.