சிறப்பாக இடம்பெற்ற மனைப்பொருளியலும் கைவேலைக்குமான கண்காட்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
சிறப்பாக இடம்பெற்ற மனைப்பொருளியலும் கைவேலைக்குமான கண்காட்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி கிளையினுடைய ஒழுங்குபடுத்தலின் கீழ், வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மகளிர் நிலையத்தின் மனைப்பொருளியலும் கைவேலைக்குமான கண்காட்சி நிகழ்வும் கற்கைநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 14.02.2024 கூழாமுறிப்பு பொதுநோக்கு மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக நிர்வாக உத்தியோதர் கு.திருக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சி.உமாபாலன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் பயிற்சியினை நிறைவு செய்த பெண்களின் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்ட பொருட்களை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வியந்தது பார்த்தது மட்டுமல்லாது அதனை கொள்வனவு செய்ததையும் அவதானிக்க முடிந்தது.
இறுதியாக உருவாக்கும் கலைகளில் பயிற்சியினை நிறைவு செய்த பெண்களுக்கான கௌரவமும் அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது
நிகழ்வில் கிராம அலுவலர் கூழாமுறிப்பு அ.த.க பாட்சாலை அதிபர் கிராமத்தில் பணியாற்றும் ஏனைய அதிகாரிகள் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் கரைதுறைப்பற்று புதுக்குடியிருப்பு பகுதிகளில் குறித்த பயிற்சி பெற்றுவரும் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment