புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (17) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பனை தென்னை கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக நபர் ஒருவர் 17.02.2024 இன்று மாலை தனது தொழிலை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் தேவிபுரம் பகுதியில் வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கட்டையில் குறித்த நபர் பயணித்த உந்துருளி மேதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்
தேவிபுரம் ஆ பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய விநாயகம் என்று அழைக்கப்படும் சி.சிவபாஸ்கரன் என்பரே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
வீதிக்கு குறுக்கே விழுந்து கிடந்த மரக்கிளையை அகற்றாமல் ஒரு உயிர் அநியாயமாக பிரிந்துள்ளது உடனடியாக குறித்த மரக்கிளையை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை .

No comments:
Post a Comment