அண்மைய செய்திகள்

recent
-

தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே! றிஷாட்

 

தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே! றிஷாட் 



தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே என பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.


நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் தேர்தல் தொடர்பாக தங்களுடைய நிலைப்பாடு என்ன என வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


எமது கட்சியை பொறுத்தவரை  எந்த தேர்தல் நடந்தாலும் தயாராக இருக்கின்றோம். ஆனால் எந்த தேர்தல் நடக்கும் என யாராலும் கூற முடியாமல் இருக்கின்றது.


நாட்டினுடைய அரசியல் அமைப்பு சட்டத்தின்படியும் தேர்தல் முறைப்படியும் ஜனாதிபதி தேர்தலே நடாத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தை கலைத்து பாராளுமன்ற தேர்தலை நடாத்த முடியும்.


எதை முன்னர் செய்வார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேசிய கட்சியோடு சேர்ந்து பயணிப்பதா ? அல்லது பொதுத்தேர்தலாக இருந்தால் எவ்வாறு பயணிப்பது? , ஜனாதிபதி தேர்தலாக இருந்தால் எவ்வாறு பயணிப்பது என்பதனை எமது கட்சி கூடி முடிவெடுக்கும் என மேலும் தெரிவித்தார்.

தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே! றிஷாட் Reviewed by வன்னி on February 17, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.