அண்மைய செய்திகள்

recent
-

உடையார் கட்டு மகாவித்தியாலய மாணவர்களின் மரதன் ஓட்டப்போட்டி!

முல்லைத்தீவு மாவட்டத்தின்  முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட  உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவர்களின் 2024 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுனர் போட்டியினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான மரதன் ஓட்டப்போட்டி நேற்று 07.03.2024 சிறப்பாக  இடம்பெற்றது.


ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து உடையார்கட்டு மகாவித்தியாலயம் வரையும் பெண்களுக்கான மரன் ஓட்டப்போட்டி கைவேலி கணேசாவித்தியாலயத்திற்கு முன்பாக இருந்து உடையார் கட்டு மகாவித்தியாலயம் வரை இடம்பெற்றது .

இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பாடசாலையின் மாணவ மாணவிகள் 60 பேர் கலந்து  கொண்டனர்

குறித்த மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தை ந.பவிராஜ் அவர்களும் இரண்டாம் இடத்தை ஜெ.தியாகசீலன் அவர்களும் மூன்றாம் இடத்தை  வி.அபிசன் அவர்களும் பெற்றுக்கொண்டதோடு பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை .ச.அபிசா அவர்களும் இரண்டாம் இடத்தை  மோ.துர்க்கா அவர்களும் மூன்றாம் இடத்தை  இ. பன்சிகா
அவர்களும் பெற்றுக்கொண்டனர்

ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவிலும்  வெற்றிபெற்ற  முதல்  மூன்று இடங்களையும் பெற்ற வீரர்களுக்கு பதங்கங்களும் கேடயங்களும் சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளதுடன் முதல்  பத்து   இடங்களை பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த மரதன் ஓட்டப்போட்டிக்கான முழுமையான நிதி அனுசரணையினை கனாடவில் வசிக்கும் கந்தசாமி பத்மநாதன் அவர்கள் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது


















உடையார் கட்டு மகாவித்தியாலய மாணவர்களின் மரதன் ஓட்டப்போட்டி! Reviewed by NEWMANNAR on March 08, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.