அண்மைய செய்திகள்

recent
-

எட்டு ஆண்டுகளாக வீதியில்! மகளிர் தினம் எமக்கு துக்கத் தினம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்

 எட்டு ஆண்டுகளாக வீதியில்! மகளிர் தினம் எமக்கு துக்கத் தினம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்.


மகளிர் தினமான இன்று (08.03.2024) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள சுற்றுவட்ட பகுதியில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும்  கவனயீர்ப்பு  போராட்டம்  ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

மகளிர் தினம் எமக்கு துக்கத் தினம் என தெரிவித்து மகளிர் தினமான இன்று  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளால் குறித்த   போராட்டம் முன்னெடுக்கப்பட்டது 

முல்லைத்தீவு  மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த 2017.03.08 அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம்  ஏழு ஆண்டுகள்  பூர்த்தியாகி இன்று எட்டாவது ஆண்டாக இடம்பெறுகிறது இந்நிலையில் இன்று தமது ஏழு ஆண்டு தொடர் போராட்டத்தை  நினைவு படுத்தியும் இன்றைய  மகளிர் தினத்தை   துக்கத் தினமாக தெரிவித்தும்  சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் குறித்த போராட்டத்தை   முன்னெடுத்தனர் 

குறித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த உறவினர்கள், தென்பகுதியில் இருந்து வருகை தந்த மதகுரு செறாட் ஜெயவர்த்தன  உள்ளிட்ட குழுவினரும்  இணைந்திருந்தனர் . 

குறித்த போராட்டத்தின் போது இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள், நீதி தேவதை ஏன் கண்மூடி விட்டாய்?சர்வதேசமே இன்று பெண்கள் தினமா? பெண்கள் ஒடுக்கப்படும் தினமா?, முடிவில்லா துயரம் தான் தமிழ் தாயின் தலைவிதியா?, 55 ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா?, கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும், பெண்கள் நாட்டின் கண்களா ? இல்லை கண்ணீருக்காக  கண்களா?  போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
























எட்டு ஆண்டுகளாக வீதியில்! மகளிர் தினம் எமக்கு துக்கத் தினம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம் Reviewed by NEWMANNAR on March 08, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.