வெகுவிமர்சையாக நடைபெற்ற சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் விழையாட்டுத்திருவிழா
வெகுவிமர்சையாக நடைபெற்ற சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் விழையாட்டுத்திருவிழா
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் விழையாட்டுத் திருவிழாவானது பாடசாலையின் தரம் 04 மாணவன் ஜெகன் ரிஷானன் தலைமையில் நேற்று (06.03.2024) மாலை பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விழையாட்டுத்திருவிழாவானது ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அணிநடை மரியாதை, விழையாட்டுகள் நிகழ்வுகள், விநோதஉடை, இடைவேளை நிகழ்ச்சிகள் என்பன சிறப்பாக நடைபெற்றன.
இவ்விளையாட்டு விழாவில் பிரதான விருந்தினர்களாக பாடசாலை பழைய மாணவரும் கட்டமைப்பு பொறியியலாலருமான ஞானமனோகரசீலன் கருணாகரன், பழைய மாணவியும் இலங்கை வங்கி முகாமையாளருமான ராஜிதா கீரன் மற்றும் பழைய மாணவரும் மாத்தளன் றோ. க. அ. த. க பாடசாலை அதிபருமான தாமோதரம்பிள்ளை மங்களரூபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த விளையாட்டு திருவிழாவில் , பாட்சாலை அதிபர், பாட்சாலையின் முன்னாள் அதிபர்கள் , ஓய்வு நிலை கல்வித்திணைக்கள அதிகாரிகள், அயன் பாட்சாலை அதிபர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள், பழைய மாணவர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
வெகுவிமர்சையாக நடைபெற்ற சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் விழையாட்டுத்திருவிழா
Reviewed by NEWMANNAR
on
March 08, 2024
Rating:

No comments:
Post a Comment