6 பேர் கொலை வழக்கு - இலங்கை மாணவன் நீதிமன்றில்
கனடாவில், ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொன்று கனேடிய பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை மாணவர் இன்று (14) மீண்டும் ஒட்டாவா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இலங்கை மாணவர் பெப்ரியோ டி சொய்சா வியாழன் அன்று ஒட்டாவா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவர் 6 முதல் தர கொலை மற்றும் ஒரு கொலை முயற்சிக்கு முறைப்படி குற்றம் சாட்டப்பட்டார்.
கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான Barrhaven இல் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கடந்த புதன்கிழமை இரவு அவர்களது வீட்டில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய 19 வயதுடைய இலங்கை மாணவர் பெப்ரியோ டி சொய்சா அன்றிரவு ஒட்டாவா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, கணனி விளையாட்டுகள் தொடர்பில் சந்தேகிக்கப்படும் 19 வயதுடைய இலங்கை மாணவர் நடத்தும் யூடியூப் சேனலை இடைநிறுத்துவதற்கு கூகுள் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஒட்டாவாவில் நடந்த கொடூர கொலையை தொடர்ந்து, யூடியூப் நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, சந்தேக நபரின் சேனல் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

No comments:
Post a Comment