நாளை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்!
நாளை (15) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொணராகலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இதனால் அவதானம் செயல்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளுமாறும், குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment