மன்னார் UCMAS (யூசி மாஸ்) மாணவர்கள் ஜோர்ஜியாவில் சாதனை
ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் கடந்த 06 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
இவர்களில் மன்னார் யூசிமாஸ் பயிற்சி நிலைய மாணவர்கள் 4 பேர் பங்கேற்று வெற்றி கிண்ணங்களைப் பெற்று இலங்கைக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
அவர்களில் வின்சென்ட் செஷான் ஜெத்னியல் ( மன். புனித சேவியர் ஆண்கள் தேசிய பாடசாலை) மற்றும் ராஜநாயகம் ரியானா ( தோட்ட வெளி தமிழ்க் கலவன் பாடசாலை) ஆகியோர் 1st runner up வெற்றிக் கிண்ணங்களையும் வின்சென்ட் செகைனா தியோரா ( மன்னார் டிலாஷால் ஆங்கிலப் பாடசாலை) 2nd runner up வெற்றிக் கிண்ணத்தையும் மற்றும் வின்சென்ட் செலமியா (மன்னார் டிலாசால் ஆங்கிலப் பாடசாலை) 3rd runner up வெற்றிக் கிண்ணத்தையும் பெற்றுள்ளார்கள்.
அத்துடன் அங்கு நடைபெற்ற UCMAS world cup போட்டிக்குரிய அணியின் தலைவராக மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய மாணவன் வின்சென்ட் செஷான் தலைமை தாங்கி Silver Medal ஐ இலங்கைக்கு பெற்றுக் கொடுத்து இலங்கைக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் பெருமையைத் தேடித் தந்துள்ளார்.
இவர்கள் நால்வரும் மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய நிர்வாகி நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியர் யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இப்போட்டியில் பங்கு பற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Reviewed by Vijithan
on
December 08, 2025
Rating:
%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88.jpg)

No comments:
Post a Comment