யாழ் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!
இந்திய இழுவை படகினுடைய அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகத மேற்கொள்ளப்படும் குறித்த போராட்டத்திற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டுமெனவும் வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றைய தினம் (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொதுச் சபை கூட்டமானது முல்லைதீவிலே நடைபெற்றது.
அக்கூட்டத்தில் இந்திய இழுவை படகினுடைய அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக 5 ஆம் திகதி இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக எடுக்கப்பட் தீர்மானத்தி அமை போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment