அண்மைய செய்திகள்

recent
-

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

 கல்முனை வலயக் கல்வி அலுவலத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று (2024.03.25 )வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.


வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில் அரச நிறுவனங்களின் பிரதானிகள், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், வலயக் கல்வி பணிமனை கணக்காளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்முனை கல்வி வலய அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வைத்து ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு உதவும் காஸா நிதியத்திற்கு 3 இலட்சம் நிதியும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு Reviewed by Author on March 25, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.