உயிர்த்த ஞாயிறுதாக்குதல்சூத்திரதாரிகள் - உண்மையை வெளியிட தயார் என்கின்றார் மைத்திரி
உயிர்த்த ஞாயிறுதாக்குதலை முன்னெடுத்தவர்கள் குறித்த விபரங்கள் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவிட்டலோ அல்லது வேறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டாலோ உண்மையை வெளியிட தயார் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் குறித்த விபரங்களை எவரும் இதுவரை வெளியிடவில்லை நான் இந்த விபரங்களை வெளியிடதயார் என அவர் தெரிவித்துள்ளார்
எனினும் இந்த விடயங்கள் குறித்த இரகசியதன்மையை நீதிபதிகள் இறுக்கமாக பேணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
உயிர்த்த ஞாயிறுதாக்குதல்சூத்திரதாரிகள் - உண்மையை வெளியிட தயார் என்கின்றார் மைத்திரி
Reviewed by Author
on
March 22, 2024
Rating:

No comments:
Post a Comment