மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி
மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நேற்று (13) மாலை மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார். மேலும் மேலதிக அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர்கள் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் போது மாற்றாற்றல் கொண்டவர்களின் பல்வேறு போட்டிகள் இடம் பெற்றதோடு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி
Reviewed by Author
on
March 14, 2024
Rating:

No comments:
Post a Comment