மன்னாரில் தியாகி சாந்தனுக்கு மலர் அஞ்சலி
மன்னார் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் தியாகி சாந்தனுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது.
குறித்த அஞ்சலி நிகழ்வு மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (04) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் ன் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் மத தலைவர்கள், தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க உறுப்பினர்கள், முன்னால் நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள்,தமிழ் தேசிய உணர்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது சாந்தனின் திருவுருவப் படத்திற்கு மாலை அனுவிக்க பட்டு மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
மன்னாரில் தியாகி சாந்தனுக்கு மலர் அஞ்சலி
Reviewed by Author
on
March 04, 2024
Rating:

No comments:
Post a Comment