மன்னாரில் கிறிஸ்து ஜேசுவின் மரண நாள் நினைவாக பல்வேறு இடங்களில் தாக சாந்தி
உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை ஜேசு கிறிஸ்துவின் மரண நாளை பெரிய வெள்ளியாக அனுஸ்ரித்து வருகின்றனர் இதனை ஒட்டி நேற்று வியாழக்கிழமை இரவில் இருந்து கத்தோலிக்க தேவாலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதுடன் மத அனுஸ்ரானங்களும் இடம் பெற்று வருகின்றது
அதே நேரம் இன்றைய தினம் நண்பகல் மக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் தாக சாந்தி ஏற்பாடு செய்யப்பட்டு பொது மக்களாலும் அரச சார்பற்ற நிறுவனக்களாலும் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் உட்பட பல்வேறு தாக சாந்தி ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது
ஏராளமான பொது மக்கள் வரிசைகளில் நின்று தாக சாந்தியை பெற்று கொண்டனர்
அதே நேரம் கிறிஸ்தவமதத்தை சேர்ந்த அமைப்புக்களாலும் இன்றைய தினம் பொது இடங்களில் ஜேசுவின் மரணத்தை நினைவு கூறும் வகையில் வழிபாடுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment