வவுனியாவில் ரி56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயின் பாேதைப் பாெருளுடன் இளைஞன் கைது
வவுனியாவில் ரி56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயின் பாேதைப் பாெருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (22.03) கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பாெலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்காெள்ளப்பட்ட விசேட சாேதனையி்ன் பாேது
செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியில் ரி56 துப்பாக்கி ரவைகள் 13 உம் 1005 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படை.யினரால் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பாெலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment