முல்லைத்தீவில் மாபெரும் நடமாடும் சேவை!
முல்லைத்தீவில் மாபெரும் நடமாடும் சேவை! பங்குபற்றி பயன்பெறுமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடத்தப்படுகின்ற குளோபல் பெயார் ( global fiar) என்கின்ற நடமாடும் சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி மற்றும் நான்காம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்திலே இடம்பெற இருக்கின்றது
எனவே இந்த நடமாடும் சேவையிலே முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்களை பங்குபற்றி பயன்பெறுமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(26) ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்திய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி. குணபாலன் ஆகியோர் இந்த நடமாடும் சேவை தொடர்பில் விளக்கங்களை வழங்கினர்
முல்லைத்தீவில் மாபெரும் நடமாடும் சேவை!
Reviewed by NEWMANNAR
on
April 27, 2024
Rating:

No comments:
Post a Comment