வவுனியா பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் கலை கலாசார நிகழ்வும் சஞ்சிகை வெளியீடும்.
வவுனியா பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் கலை கலாசார நிகழ்வும் சஞ்சிகை வெளியீடும்.
வவுனியா பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் நல்லிணக்க மையத்துடன் இணைந்தது ஏற்பாடு செய்த கலை, கலாசார நிகழ்வும் அஸ்- ஸனாபில் நான்காவது வருடாந்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் கடந்த 24.04.2024 புதன்கிழமை இடம்பெற்றது.
சமூக நல்லிணக்கத்தையும் கலாசார பிரதிபலிப்பினையும் ஏற்படுத்த ‘ஹிலால்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தரும் பேராசிரியருமான டி. மங்களேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
முஸ்லிம்களின் கலாசார உடை கண்காட்சி, அரபு எழுத்தணி கண்காட்சி போன்ற சிறப்பம்சங்களை கொண்ட குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டதோடு வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிட்டத்தக்கதாகும்.

No comments:
Post a Comment