புத்தாண்டு காலப்பகுதியில் முட்டையின் விலையில் வந்த அதிரடி மாற்றம்
இன்று (02) முதல் வாடிக்கையாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் நிவாரணப் பொதி ஒன்றை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பொதியை 3,420 ரூபா என்ற சில்லறை விலையில் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதாக சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
மேலும், சதொச நிறுவனம் இன்று முதல் ஒரு முட்டையை 36 ரூபா என்ற சில்லறை விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
புத்தாண்டு காலப்பகுதியில் முட்டையின் விலையில் வந்த அதிரடி மாற்றம்
Reviewed by Author
on
April 02, 2024
Rating:

No comments:
Post a Comment