வெகுவிமர்சையாக நடைபெற்ற முல்லைத்தீவு இந்து தழிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி
வெகுவிமர்சையாக நடைபெற்ற முல்லைத்தீவு இந்து தழிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட
முல்லைத்தீவு இந்து தழிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியானது பாடசாலையின் அதிபர் குணபாலன் மகேந்திரன் தலைமையில் இன்று (02.04.2024) மாலை 02.30 க்கு பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இல்ல மெய்வல்லுநர் போட்டியானது ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அணிநடை மரியாதை விளையாட்டு நிகழ்வுகள் இடைவேளை நிகழ்ச்சிகள் பரிசில் வழங்கல் போன்ற நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் அவர்களும் கரைத்துறைபற்று பிரதேச செயலாளர் மணிவண்ணன் உமாமகள் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக உதவிக்கல்வி பணிப்பாளர் கணிதம் சி.புஸ்பகாந்தன் அவர்களும் கோட்டக்கல்வி பணிப்பாளர் கரைத்துறைபற்று த. ஸ்ரீபுஸ்பகாந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றிச் சான்றிதழ், வெற்றிப் பதக்கங்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது
குறித்த விழையாட்டு நிகழ்வில் ஆசிரியர் மாணவர்கள் பழைய மாணவர்கள் பெற்றேர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
Reviewed by Author
on
April 02, 2024
Rating:








No comments:
Post a Comment