இலங்கை கடற்பரப்பில் சிக்கிய பாரியளவான போதைப்பொருள்
தென் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டிருந்த பாரியளவான போதைப்பொருள் நேற்று மாலை காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
250 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற 02 நெடுநாள் மீன்பிடிக் கப்பல்களை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்திருந்தனர்.
அந்தக் கப்பலில் 179 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 83 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஹெராயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் சிக்கிய பாரியளவான போதைப்பொருள்
Reviewed by Author
on
April 14, 2024
Rating:

No comments:
Post a Comment