எதிர்க்கட்சித் தலைவரால் மு/பாரதி மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் கணனிகள் கையளிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்றைய தினம்(03.04.2024) முல்லைதீவு பாரதி மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் கணனிகள் ஐந்து உள்ளிட்ட பொருட்கள் கையளிக்கப்பட்டது
நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஸ்மார்ட் கணணி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்ப முன்னெடுக்கப்படும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் பத்து இலட்சத்திற்கும் அதிகமான நிதியில் குறித்த ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஐந்து கணணிகள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு கையளிக்கப்பட்டது
பாரதி மகா வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை மாணவர்களிடம் கையளித்தார்
இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச அவர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திரபிரகாஸ் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் மு.லக்சயன் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் கட்சி பிரமுகர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கில் மு/ பாரதி மகா வித்தியாலயத்தில் திறன் வகுப்பறைகள் இன்றையதினம் (03.04.2024) எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாசாவினால் திறந்து வைக்கப்பட்ட நிலையில் பாடசாலையில் விஷேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

No comments:
Post a Comment