கோப்பாயில் கசிப்பு விற்பனை; பெண் கைது
>யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
24 ஆம் திகதி போயா தினமான இன்று மதுபானசாலைகள் மூடப்பட்ட நிலையில் கசிப்பு வியாபாரத்தில் பெண் ஒருவர் ஈடுபடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்பாயில் கசிப்பு விற்பனை; பெண் கைது
Reviewed by Author
on
May 24, 2024
Rating:
Reviewed by Author
on
May 24, 2024
Rating:


No comments:
Post a Comment