அண்மைய செய்திகள்

recent
-

மூன்றாம் உலகப் போர் குறித்து பகீர் கிளப்பும் பிரபல ஜோதிடர்!

 மூன்றாம் உலகப் போர் பற்றிய கருத்து பல தசாப்தங்களாக தீவிர ஊகங்கள் மற்றும் விவாதமாக இருந்து வருகிறது. முதல் இரண்டு உலகப் போர்களின் அழிவுகரமான தாக்கங்கள் இன்னும் உலக மக்களின் நினைவில் இருந்து அகலாத நிலையில், மற்றொரு பெரிய அளவிலான போர் குறித்த சிந்தனை திகிலூட்டும் நிலையில் உள்ளது.


ஆனால், தற்போது ரஷியா - நோட்டா உறுப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற உக்ரைன் இடையிலான போர் மற்றும் வட மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை போன்றவற்றால் மூன்றாம் உலகப்போர் குறித்த நினைவுகளை மீண்டும் கிளறிவிட்டிருக்கின்றன.


ஏற்கனவே பாபா வங்கா,நாஸ்ட்ராடாமஸ் கணித்த கணிப்புகள் அப்படியே நடைபெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.


அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் இது தொடர்பாக தனது வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


2024-ல் உலகெங்கிலும் நடைபெறும் போர் பதற்ற சூழ்நிலைகளே இதை கணிக்க கூடியதாக உள்ளது. கொரியா நாடுகள், சீனா-தைவான், மத்திய கிழக்கு போன்ற போர் பதற்றம் உள்ளிட்ட செய்திகளும், இஸ்ரேல், காசா போரும் இதற்கு உதாரணமான கணிப்பை தருகின்றன.மேலும் மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன்-ரஷியா போர் உள்ளிட்டவையும் நேட்டோ நாடுகளின் கோபமும் வெளிப்படும்.


சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். சிலர் கடுமையான உடல் நிலையால் பாதிக்கப்படலாம் அல்லது ராஜினாமா செய்ய நேரிடலாம். அதே நேரத்தில் இன்னும் சில நாடுகளின் அரசியல் எழுச்சி ஏற்படலாம். அதை தடுக்க ராணுவம் கொண்டு வரப்படலாம். இதனால் இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஜூன் 18 ஆம் திகதிக்கு பிறகு 3-வது உலக போரை தூண்டுதலுக்கான சாத்திய கூறுகள் உள்ளன. அதற்கு முன்னதாக ஜூன் 10 ஆம் திகதியோ அல்லது 29 ஆம் திகதியோ கூட நிகழ வாய்ப்பு உள்ளது.


இவ்வாறு அவர் தனது வலைதளப்பக்கத்தில் கூறி உள்ளார்.


அரியானாவின் பஞ்சகுலாவைச் சேர்ந்த ஜோதிடர் குஷால் குமார், உலக நிகழ்வுகளை முன்னறிவிக்கும் ஜோதிடர் என தன்னை வர்ணித்துக் கொள்கிறார். இதனால் மூன்றாம் உலகப்போர் குறித்த அவரது முன்னறிவிப்பு செய்தி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது



மூன்றாம் உலகப் போர் குறித்து பகீர் கிளப்பும் பிரபல ஜோதிடர்! Reviewed by Author on May 24, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.