மன்னார் பேசாலையில் வாள் வெட்டு- ஒருவர் வைத்திய சாலையில் அனுமதி.
மன்னார்- பேசாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முருகன் கோவிலடி 7ஆம் வட்டார பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயங்களுடன் யாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது கடந்த 22ம் திகதி புதன்கிழமை இரவு 9 மணியளவில் நடை பெற்றுள்ளது.
வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் அதே ஊரை சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வருகிறது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடந்த 23 ஆம் திகதி பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும் வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
மேலும் அன்றை தினம் வாள் கத்தி இரும்பு கம்பிகளுடன் 15க்கும் மேற்பட்ட நபர்கள் வந்ததாகவும் வந்தவர்கள் கடும் போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் இவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
குறித்த பகுதி மக்கள் வாள்வெட்டு நபர்களுக்கு எதிராக கையெழுத்திட்டு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கத
2 comments:
தவறான செய்தியை பதிவுத்துள்ளீர்கள் ஒரு பக்கமாக நீங்கள் செய்தியை வெளியிட்டுள்ளீர்கள் தயவு செய்து சரியான செய்தியை தெரிவு செய்து நீங்கள் பதிவு செய்யவும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அந்த இருப்பிடம் தேடி வந்து பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு கடைக்கு முன்னாடி பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்திச் சென்றுள்ளனர் மறுபுறம் இப்படி வெட்டுவாங்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர் இரு நபர்களுக்கு வெட்டியுள்ளார் அந்த இரு நபர்களும் காயங்களுடன் இருக்கிறார்கள் பெட்ரோல் குண்டு தாக்கிய நபரை இன்னும் கைது செய்யவில்லை அவர்களும் மறைமுகமாக இருக்கிறார்கள் இந்த வெட்டு வாங்கிய நபர் இரு நபர்களை வெட்டியபடியால் பாதுகாப்புக்காக மற்ற நபர்கள் வெட்டியதுதான் உண்மை இதை ஒரு பக்க சார்பாக நியூமன்னார் இளைய தளம் இதை வெளியிட்டுள்ளது இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் தயவு செய்து நியூ மன்னார் இணையதளம் சரியாக விசாரித்து உண்மை செய்தியை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
இதற்கான வீடியோ ஆதாரங்களும் என்னிடம் உள்ளது பெட்ரோல் குண்டு தாக்கும் ஆதாரம் அந்த நபர் வந்து பெட்ரோல் குண்டை போடும் ஆதாரம் விட்டு வாங்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர் ஓடி வந்து வாளால் இரு நபர்களுக்கு வெட்டும் ஆதாரம் எல்லாம் கேமராமமூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி என்னிடம் உள்ளது தயவுசெய்து மீடியாக்கள் இதை வெளியிடுவதற்கு முன் இரு பக்கமும் விசாரித்து என்ன நடந்தது என்ற உண்மையை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்னிடம் சகலத்துக்குமான வீடியோ ஆதாரங்கள் உள்ளன
Post a Comment