அண்மைய செய்திகள்

recent
-

ISIS உடன் தொடர்புடைய இருவர் இலங்கையில் கைது

 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய உறவைப் பேணி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் ஹலவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் வெளி மாகாணத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்திலும் மற்றைய சகோதரர் கொழும்பில் உள்ள கொள்கலன் முனையத்திலும் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர் கொழும்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்த இரு சகோதரர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசேட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இரண்டு சகோதரர்களும் ஹலவத்தை பகுதியில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்த போது கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



ISIS உடன் தொடர்புடைய இருவர் இலங்கையில் கைது Reviewed by Author on May 28, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.