அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை, இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

 இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும்  இடையிலான பயணிகள் கப்பல் சேவையை நாளை (13) மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி எதிர்வரும் 17ம் திகதி தொடக்கமே சேவைகள் ஆரம்பிக்கப்படுமென கப்பல் சேவையை இயக்கும் தனியார் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவும், தாமதமான கப்பலின் வருகையினாலும் எமது திட்டமிட்ட நாகை காங்கேசன், பயணிகள் கப்பல் சேவையினை 13/05/2024 முதல் 16/05/2024 இயக்கமுடியவில்லை.


சேவையினை 17/05/2024 இல் இருந்து இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.


13/05/2024 முதல் 16/05/2024 பதிவு செய்த பயணிகளை 17/05/2024 சேவைக்கு மாற்றியுள்ளோம்.


பதிவு செய்த பயணிகள் 17/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் அவர்கள் விரும்பிய திகதிகளில் பயணிக்கலாம்.


அல்லது செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். 


செலுத்திய கட்டணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.



இலங்கை, இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு! Reviewed by Author on May 13, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.