அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கட்டுக்கரை குளத்தின் கீழ் இம்முறை 3 ஆயிரத்து 495 ஏக்கர் சிறுபோக செய்கை முன்னெடுக்க நடவடிக்கை-அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

 மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் புலவு நிலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற சிறுபோக நெற் செய்கைக்கான ஏற்பாடுகள் தற்போது மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள  ல்  நிலையில் முதல் கட்ட நீர் விநியோகம் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.


-மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (20) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,


மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் புலவு நிலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற சிறுபோக நெற் செய்கைக்கான ஏற்பாடுகள் தற்போது மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மாவட்டத்தில் மொத்தமாக கால போக பயிர்ச்செய்கை ஆனது 30 ஆயிரத்து 36 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்கை முன்னெடுக்கப்பட்டது.


அதனடிப்படையில் கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தில் 12 க்கு 1 என்ற அடிப்படையில் 2918 ஏக்கர் கட்டுக்கரை குளத்தின் கீழ் இவ்வருடம் சிறுபோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு இருந்தது.


எனினும் தற்போது பெய்து வருகின்ற மழையுடனான காலநிலை யை கருத்தில் கொண்டு கடந்த 16ஆம் திகதி (16-05-2024) வாய்க்கால் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் இடம் பெற்ற கூட்டத்திற்கு அமைவாக 10 இற்கு 1 என்ற அடிப்படையில் (அதாவது 10 ஏக்கர் பெரும்போகம் செய்த ஒரு விவசாயிக்கு 1 ஏக்கர் புலவில் பயிர்ச்செய்கை) இவ்வருடம் சிறு போகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதனடிப்படையில் இவ்வருடம் 3495 ஏக்கர் சிறுபோக செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே திறக்கப்பட்ட புலவுக்கு மேலதிகமாக 6 புலவுகள் திறக்கப்பட்டு சிறு போகத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.


முதலாம் கட்ட நீர் திறப்பு எதிர்வரும் 27-05-2024 அன்று சிறு போகத்திற்கு திறந்து விடப்பட உள்ளது.நீர் விநியோக இறுதி திகதி 14-09-2024 என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எனவே கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக செய்கை முன்னெடுக்கவுள்ள விவசாயிகள் நீர் திறப்பு திகதி மற்றும் நீர் விநியோக இறுதி திகதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறுபோக செய்கை யை மிக விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள காணிகளுக்கு காணிகளின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.



மன்னாரில் கட்டுக்கரை குளத்தின் கீழ் இம்முறை 3 ஆயிரத்து 495 ஏக்கர் சிறுபோக செய்கை முன்னெடுக்க நடவடிக்கை-அரசாங்க அதிபர் தெரிவிப்பு. Reviewed by Author on May 20, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.