மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 82 கிலோ ஆமை இறைச்சியுடன் இருவர் கைது
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன் 2 சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை(30) மதியம் பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 82 கிலோ கடலாமை இறைச்சி பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மீன்கள் பொதி செய்து கொண்டு செல்லும் போர்வையில் குறித்த கடலாமை பொதி செய்யப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இராணுவ புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பள்ளமடு வீதியில் வைத்து குறித்த வாகனத்தை சோதனை செய்த போது குறித்த கடலாமை இறைச்சிகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதை கொண்டு சென்ற இரண்டு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 Reviewed by Author
        on 
        
May 30, 2024
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 30, 2024
 
        Rating: 

.jpeg)


 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment