மன்னார் உயிலங்குளம் ஆரம்ப வைத்தியசாலைக்கு புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் தேவையான ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் கையளிப்பு.
மன்னார் உயிலங்குளம் ஆரம்ப வைத்தியசாலைக்கு தேவையான ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் துஷ்யந்தன் அவர்களின் கோரிக்கைக்கு அமைய ரூபா. 250,000 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நோயாளிகளுக்கு அவசியமான சில பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
புலம்பெயர் நாட்டில் இருந்து வருகை தந்த நபரால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த வைத்திய சாலைக்கு 50 மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காகவும், பல்வேறு நோய்கள் உடைய 200 பேர் கிளினிக்கிற்கு நாளாந்தம் வந்து செல்கின்றனர்.
மேலும் புலம்பெயர் நாட்டில் உள்ள சிலர் இணைந்து குறித்த உதவியை வழங்கி வைத்துள்ளனர்.
இதன் போது மன்னார் பிராந்திய சுகாதார சேவை பணிமனை யின் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
May 14, 2024
Rating:


No comments:
Post a Comment