குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட அரிசியை உண்ட ஏழு கோழிகள் இறப்பு
அரசாங்கத்தினால் குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசியை உட்கொண்டு பாணகமுவ பகுதியில் ஏழு கோழிகள் உயிரிழந்துள்ளன. அரசியின் தரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை அரசாங்கம் அறிந்துள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் அரசி வழங்கப்படுகின்றது. விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் தொடர்பில் கடந்த காலங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
வழங்கப்படும் இலவச அரிசி தொடர்பில் இன்று (நேற்று) ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளன. அதாவது பாணகமுவ பிரதேசத்தில் உள்ள ஒருவர் அரசாங்கத்தினால் கிடைக்கப் பெற்ற அரிசியை தான் வளர்க்கும் கோழிகளுக்கு தானியமாக வழங்கியுள்ளார்.இதனை உட்கொண்ட 07 கோழிகள் உயிரிழந்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதா? என என கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த சபை முதல்வரும்,கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த இந்த கேள்விக்கு உடனடியாக பதிலளிக்க முடியாது.விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்.
அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் தொடர்பில் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலும் கேள்விகள் எழுப்பட்டன என்றார்.
Reviewed by Author
on
May 14, 2024
Rating:


No comments:
Post a Comment