வெசாக் பௌர்ணமி தினத்தில் மாங்குளம் பொலிசாரால் ஐஸ்கிரீம் அன்னதானம்
வெசாக் பௌர்ணமி தினத்தில் மாங்குளம் பொலிசாரால் ஐஸ்கிறீம் அன்னதானம்
பௌத்தர்களின் புனித பெருநாளான வெசாக் பௌர்ணமி தினத்தில் மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கான ஐஸ் கிறீம் அன்னதானம் வழங்குகின்ற நிகழ்வு இன்றைய தினம் (23) இடம்பெற்று வருகின்றது
இன்று காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இரண்டு அசோக பெரேரா மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீல் கிரிந்தே உள்ளிட்ட அதிகாரிகளால் ஐஸ் கிறீம் அன்னதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து ஏ_9 பிரதான வீதியூடாக செல்கின்ற பயணிகள் மற்றும் மாங்குளம் கிராமத்தினுடைய மக்கள் என பலருக்கும் ஐஸ்கிறீம் அன்னதானம் வழங்கப்பட்டது

No comments:
Post a Comment