சாதித்து காட்டிய மடு வலயம் மாகாண ரீதியாக முதலிடம்
கடந்த வருடம் இடம் பெற்ற க.பொ.தா உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் மடு கல்வி வலயத்தை மன்/ஆண்டாங்குளம் பாடசாலையை சேர்ந்த மாணவன் அம்பிகைபாகன் உமாகேசன் வணிகபிரிவில் 3 A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் நிலையை பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் விஞ்ஞான பிரிவில் மன்/அடம்பன் மத்திய மாகாவித்தியாலயத்தை சேர்ந்த சுப்பிரமணியம் பவிகரன் 2A B தர சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்று கொண்டுள்ளார்.
மிகவும் பிந்தங்கிய கிராமங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் அற்ற பாடசாலைகளை அதிகம் கொண்ட மடு வலயம் இம்முறை சிறந்த பெறுபேறுகளை பொற்றுக்கொண்டுள்ளதுடன் சித்தி விகிதத்தில் வடமாகாண ரீதியாக முதல் நிலையையும அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment