அண்மைய செய்திகள்

recent
-

இசை நிகழ்வில் நடந்த கொலை இலங்கையில் பதறவைத்த சம்பவம்

 இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் தொடங்கொட, ஜன் உதான கிராமத்தைச் சேர்ந்த மெனுர நிம்தர வணிகசேகர என்ற 20 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் சில நாட்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.






கழுத்தை நெரித்து கொலை


களுத்துறை, கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த குறித்த யுவதி, தான் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலையில் இளைஞர் ஒருவருடன் நடனமாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் நடனமாடிக்கொண்டிருந்த உயிரிழந்த இளைஞனின் கழுத்தை அறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



இசை நிகழ்வில் நடந்த கொலை இலங்கையில் பதறவைத்த சம்பவம் Reviewed by Author on June 16, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.