அண்மைய செய்திகள்

recent
-

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையை சேர்ந்த சாதனை வீரன் ஹஷன் ஸலாமா.

 


திருகோணமலையை சேர்ந்த முஹம்மட்  ஹஷன் ஸலாமா  நேற்று சனிக்கிழமை (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார்.


 நேற்று சனிக்கிழமை (15) அதிகாலை 02.00 மணிக்குத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில்   நீந்தி முடித்துள்ளார்.


 பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது முஸ்லிம் நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.


தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வய­தான இவர் கடந்த மூன்று மாதங்­க­ளாக இச் சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்றார்.


கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலை­மன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில் நீந்திக் கடந்­துள்ளார். 


இவ­ருக்­கான நீச்சல் பயிற்­சி­களை விமா­னப்­படை கோப்ரல் றொசான் அபே­சுந்­தர வழங்கி வரு­கின்றார்.


மேலும் கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த ஹரி­கரன் தன்­வந்­தை­யையும் இவரே பயிற்­று­வித்­தி­ருந்தார்.


இலங்­கை­ய­ரான இள வய­தை­யு­டைய பஹ்மி ஹஸன் சலாமா நாட்டின் விளை­யாட்டு வர­லாற்­றிலே தனது பெயரை பதிந்து கொள்­வ­தற்­காக தனது இலக்­கினை அடைந்து கொள்ளும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார்.


இது­மட்­டு­மல்­லாமல், திரு­கோண மலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடாத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்­றி­யா­ள­ராக தெரிவாகி இருக்கின்றார்.


பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத் துறைக்கு அப்பால் சென்று தனது அர்ப்பணிப்புகளூடாக நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற்பாதுகாப்பு செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார்








பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையை சேர்ந்த சாதனை வீரன் ஹஷன் ஸலாமா. Reviewed by Author on June 16, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.