மன்னாரில் பாடசாலை மாணவர்கள் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி
மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 4 ஐச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று(28) வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்கும்.9 வயதுடைய 8 மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டில் எண்ணை எடுப்பதற்காக காய வைத்திருந்த ஆமணக்கு விதைகளை பாடசாலைக்கு கொண்டு வந்து சக மாணவர்களுடன் அதை உட்கொண்ட நிலையிலே குறித்த மாணவர்கள் திடீர் சுகயீனமடைந்து உள்ளதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் குறித்த 8 மாணவர்களும் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்
மன்னாரில் பாடசாலை மாணவர்கள் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by Author
on
June 29, 2024
Rating:

No comments:
Post a Comment