அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் காணாமல் போயிருந்த சிறுவன் சடலமாக மீட்பு

 இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் இன்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவனும், அவரது சகோதரன் மற்றும் இரு நண்பர்களும் அங்கு சென்றுள்ளனர்.

நேற்று காலை 11.30 மணியளவில் நீராடச் சென்ற இவர்களில் 14 வயதுடைய சிறுவன் நீர்ல் மூழ்கிய நிலையில், அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களிற்கும்  ஏனைய சிறுவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களுகும், பிரதேச மக்களுமாக நீண்ட நேரமாக ஈடுபட்ட போதும் நேற்று மீட்க முடியாது போனது.

இன்று மீண்டும் தேடப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்று வந்த முறிகண்டி வசந்தநகர் பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



கிளிநொச்சியில் காணாமல் போயிருந்த சிறுவன் சடலமாக மீட்பு Reviewed by Author on June 30, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.