நாடளாவிய ரீதியில் சுமார் 17,000 மின் துண்டிப்புகள் பதிவு
அண்மைய தினங்களாக நாடளாவிய ரீதியில் நிலவிய கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்பட்ட 17,211 மின் துண்டிப்புகளை நேற்று வரையில் மீள் திருத்த முடியவில்லை என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக 43,093 மின் துண்டிப்புகள் பதிவாகியுள்ளன.
அவற்றுள், 26,692 மின் துண்டிப்புகள் மீள் திருக்கப்பட்டுள்ளன.
இம்மாதம் 2ஆம் திகதியன்று 20,701 மின் துண்டிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் 3ஆம் திகதி 15,181 மின் துண்டிப்புகள் மற்றும் நேற்று (04) 8,021 மின் துண்டிப்புகள் பதிவாகியுள்ளன.
சில இடங்களில் தொடர்ச்சியாக சுமார் மூன்று நாட்களாக மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவ்வாறான இடங்களில் நெருங்க முடியாத அளவுக்கு நீர் நிறைந்திருக்கும் காரணத்தினால் மின் துண்டிப்பை மீள் திருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும், நாட்டில் பெய்து வந்த கடும் மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment