அண்மைய செய்திகள்

recent
-

வெற்றி பெறுவதை விட செல்வங்கள் சேர்ப்பதிலே அதிக அக்கறை செலுத்தும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை கிரிகெட் அணியின் சாதனைகள் அதன் வரலாறு பற்றிய பேச்சுக்கள் சமீபகாலமாக இணையத்தில் உலாவி வருகின்றன.

முக்கியமாக சங்கக்கார, மத்யூஸ்,அர்ஜுன ரணதுங்க, சங்ககார,அரவிந்தா, முரளி ஆகியோரின் காலங்களில் முதல்தரமாக இலங்கை கிரிகெட் அணி இருந்தது. அர்ப்பணிப்பும் காணப்பட்டது.

ஆனால், தற்போதைய அணி பொருட் செல்வங்களை சேர்ப்பதில் மிக தீவிரமாக செயற்படுவதாக விமர்சிக்கப்படுகின்றது.

விளையாட்டை விளையாடுவதை விட, புதிதாக கிடைத்த மற்றும் கிடைக்கின்ற பொருட் செல்வங்களைச் சேர்ப்பதிலேயே அதிக அக்கறை கொண்டவர்களாக திகழ்வதாக பிரபல கிரிகெட் செய்தியாளரும் விமர்சகருமான லஹிறு டொலஸ்வல தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதில், அக்காலகட்டத்தில் தங்களது திறமையை மட்டுமே நம்பி விளையாடிய வீரர்கள் பணிவு உணர்வுடன் விளையாடினார்கள். கிரிகெட்டில் சிறந்து விளங்குவது பற்றி மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.

ஆனால், தற்போது காணப்படும் வீர்ரகள், அதிகமாக தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். பணம் மற்றும் சமூக ஊடக புகழ் ஆகியவற்றின் கவர்ச்சியால் அவர்கள் எளிதில் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

உதாரணமாக இலங்கை அணியின் இந்நாள் தலைவர் வனிந்துவை எடுத்துக்கொள்ளுங்கள், வெறும் 28 வயதை அடையும் முன்பே டெஸ்ட் கிரிகெட்டை கைவிட்டு விட்டு அதிக இலாபத்தை தரும் T-20 கிரிகெட் போட்டியை தேர்ந்தெடுத்தார்.

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் ஒப்பிடும் போது இந்த நடத்தை மிகவும் கடுமையாக முரண்படுகின்றது.

ஸ்மித், ரூட் மற்றும் ஸ்டார்க் போன்ற கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு ஏற்படும் சவால்களுக்கு மத்தியிலும் அவர்களின் திறமையை அழகாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை, கிரிக்கெட்டின் உண்மையான வெகுமதிகள் தங்க ஆபரணங்கள், பிராண்டட் ஆடைகள் மற்றும் சொகுசு கார்கள் என்பவை திறமைக்கு அப்பாற்பட்டவை. அவர்களின் கவனம் உலக கோப்பையை எவ்வாறு வெல்லலாம் என்ற நோக்கத்தில் மாத்திரமே உறுதியாக உள்ளது.

“கொழும்புக்கு சென்ற பன்டா” என்ற சிங்கள பழமொழியை போல விளையாட்டில் நேர்மையை விட செல்வத்தை முதன்மைபடுத்துவதால் எங்களின் வீரர்கள் வழிதவறிவிட்டதாகவே பார்க்கப்படுவார்கள்.

இலங்கையின் நேசத்துக்குரிய பொழுதுபோக்குகளில் கிரிகெட்டுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், மேற்கூறிய கருத்துக்கள் இலங்கை கிரிகெட் அணியின் மோசமான செயற்பாடு குறித்தே இங்கு பதிவு செய்ய விரும்புவதாகவும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



வெற்றி பெறுவதை விட செல்வங்கள் சேர்ப்பதிலே அதிக அக்கறை செலுத்தும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் Reviewed by Author on June 13, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.