நான்கு வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபரை காணொளி மூலம் தெரியப்படுத்திய நபருக்கு 5 லட்சம் ரூபாய் பணப்பரிசு
நான்கு வயது சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சிறுமியை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபருக்கு எதிராக பலத்த கண்டனமும் எதிர்ப்புகளும் வெளியாகின.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டதுடன், சிறையில் விளக்கமறியல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தை காணொளியாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய இளைஞர் தற்போது ஐந்து இலட்ச ரூபாய் சன்மானம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
04 வயது சிறுமி மீதான கொடுமையை தைரியமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் என பெருமைப் படுத்தப்பட்டிருந்தார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரினால் குறித்த பணத்தொகை அவருக்கு வழங்கப்பட்டது. மேலும், அமைச்சரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
வரவேற்கத்தக்க விடயம்
இவ்வாறான விடயங்களை முன்னெடுப்பதினால் நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சித்திரவதைகள் குறையும் வாய்ப்பு ஏற்படுவதோடு சமூக பொறுப்பும் அதிகரிக்கும்.
குறித்த செயற்பாடு வரவேற்கத்தக்கது எனவும் சமூக செயற்பாட்டாளர்களும் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment