மன்னாரில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர நடுகை
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னார் பெரிய பாலம் மற்றும் தள்ளாடி இடை நடுவில் காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று (5)காலை கண்டல் தாவரங்கள் மீள் நடுகை செய்யப்பட்டது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலகம் இணைந்து மெசிடோ நிறுவனத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு மரம் நடுகையை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வுக்கான 300 கண்டல் தாவரங்களை டினோஸா கண்டல் தாவரப் பள்ளி (Dinosha Mangrove Nursery) வழங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பிரதீப் ,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கனகரெத்தினம் திலீபன் ,மன்னார் மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ சுற்றுச்சூழல் கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment